இன்று தமிழ் வலைப்பதிவுகளிலேயே முதன் முயற்சியாக உள்ளூர் நிகழ்வுகளை தடங்கலின்றி வழங்கும் நேரலை சேவையை முயற்சித்தோம். அந்த முயற்சி அல்ஹம்துலில்லாஹ் முழு வெற்றியை தந்தது. ஹைதர் அலி ஆலிம் அவர்களின் சொற்பொழிவு சுமார் 50 நிமிடங்கள் சிறப்பாக நடைபெற்றது. அதன் வீடியோ இன்ஷா அல்லாஹ் விரைவில் அப்லோட் செய்கிறோம்.
குறுகிய நேரத்தில் அறிவிக்கப்பட்டு நடத்தப்பட்ட இந்நேரலைக்கு வெளிநாடுகளிலிருந்தும் உள்நாடுகளிலிருந்தும் பெரும் ஆதரவு தந்து தொலைபேசி வாயிலாக கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் எமது நன்றி.
அது போல் உள்ளூர் தொடர்பில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துரையாடும் கான்பரன்சிங் வசதி சேவையையும் விரைவில் சோதிக்க உள்ளோம். உங்களின் மேலான ஆதரவை தொடர்ந்து வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இதனையும் பார்க்கவும்: அதிரை நிகழ்ச்சிகள் இனி நேரலைகளாக!!
இதனையும் பார்க்கவும்: அதிரை நிகழ்ச்சிகள் இனி நேரலைகளாக!!

1 comments:
தொடரட்டும் அதிரைbbcயின் சேவை இந்த நல்ல முயற்சி வெற்றி பெற என்னுடைய மனம்மார்ந்த வாழ்த்துக்கள்....
தமிழ் தட்டச்சு
Post a Comment
11