Powered by Blogger.

Followers

Saturday, 16 July 2011

இந்த அநியாயத்தை பாருங்கள் ....


ஊர்ப்புற நிர்வாகத்திற்காக அரசு சார்பில் ஒவ்வொரு ஊருக்கும் என கிராம நிர்வாக அலுவலர் (Village Administrative Officer – VAO ) நியமிக்கப்படுவார். அதன் அடிப்படையில் தற்போது நமதூரைச் சார்ந்த பகுதிகளுக்கு என இரு வி.ஏ.ஓ-க்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள். அதில் ஒருவரது அலுவலகம் அதிராம்பட்டினத்திலும், இன்னொருவர் அதிரையின் கடலோரக்கரையான ஏரிப்புறக்கரையிலும் இருக்கின்றனர்.மேலத்தெரு, கடற்கரைத் தெரு , CMP லைன் ஆகிய பகுதிகளைச் சார்ந்தவர்கள் அரசு சார்ந்த அலுவல்களுக்கு ஏரிப்புறக்கரையில் இருக்கும் கிராம நிர்வாக அலுவலரிடம் செல்லவேண்டி இருக்கின்றது. அரசிடம் இருந்து மக்களைச் சென்றடைய வேண்டிய நலத்திட்டங்களுக்கு சான்று பெறுவதற்கு ஆண்களும் பெண்களும் ஏறிப்புறக்கரைக்கு சென்று, அங்கு காத்திருந்து நமக்கான சான்றிதழ்களை பெற்று வரவேண்டும் . . அப்படி செல்லும் நேரங்களில், பெரும்பாலும் அலுவலர் அவரது அலுவலகத்தில் இருப்பதில்லை. இதனால் பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்தும் பயன் இல்லாமல் வீடு திரும்புகின்றனர் .

ஏரிப்புறக்கரையில் நீண்ட நேரம் காத்துக் கிடந்த மக்களின் அல்லலை நீங்களே பாருங்கள். கிராம நிர்வாக அலுவலரின் அலவலகத்தில் பல மணிநேரம் காத்திருந்தும் அலுவலர் கடைசிவரை வராமல் போனதனால் ஏமாற்றமே மிஞ்சியது.



அதிரை BBC செய்திகளுக்காக,
அதிரை BBC நிருபர் குழு.

1 comments:

அபுஇபுறாஹீம் said...

வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய செயல் இந்த கிரமப்புற அதிகாரி பணிக்கு உரிய நேரத்தில் வராதது.

அங்கே "காணவில்லை"ன்னு மற்றொரு பலகையும் எழுதி வைத்திருக்கலாமே !

நம் மக்களின் வரிப்பணத்தில் வருமானம் பெரும் இவர்கள் அதையும் மீறி கையூட்டுக்கும் கடைவிரிக்கும் கிரமபுற அதிகாரி எங்கே ???

Post a Comment

11