அதிரை இஸ்லாமிக் மிஷன் -AIM அமீரகத்திலிருக்கும் அதிரை சகோதரர்களால் ஆரம்பிக்கப்பட்டு அல்லாஹ்வின் பேருதவியால் சிறப்புடன் அதன் பணிகளை செவ்வனே தொடர்ந்து செய்து வருகிறது (இது தொடர்பான செய்தி www.aimuaeadirai.blogspot.comல் விபரமாக பதியப்பட்டுள்ளது).
வழமைபோல் இவ்வருடமும் ரமளான் மாதத்தின் கடமைகளை சிறப்புடன் தொடர்ந்திட அதிரை இஸ்மாமிக் மிஷன் (AIM) ஆயத்தப்படுத்திக் கொண்டுள்ளது.
உங்களின் பங்களிப்பான பித்ரு ஜகாத்தை அதிரை இஸ்லாமிக் மிஷன் வாயிலாக தேவையுடையவர்களுக்கு சென்றடைய உதவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
அப்துல்காதர் - mobile : 055-2829759
(பித்ரு ஜகாத்தை பெற்று கொள்ள அமர்த்தப்பட்டிருக்கும் பொறுப்புதாரி மக்கள் தொடர்பு)
1 comments:
அமீரகத்திலிருக்கும் அதிரை அனைத்து முஹல்லா சகோதரர்களும் அவர்களுக்கு என்று தனித்தனியாக தங்களுடைய பித்ரு ஜகாத்தை இதுவரை வழங்கி வந்திருப்பீர்கள்.
இருப்பினும் கடந்த சில வருடங்களாக மிகவும் சிறப்புடன் பித்ரு ஜகாத்தை அனைவரிடமிருந்து பெற்று முஹல்லா வாரியாக தேவையுடையவர்களுக்கு வீடுகளுக்கே கொண்டு சேர்க்கும் சேவையை AIM மிகவும் சிறப்புடன் செய்தி காட்டியிருக்கிறார்கள் எவ்வித விளம்பரம்படுத்தல் இன்றி, பித்ரு ஜகாத்தை பெருபவர்களுக்கு எவ்வித சங்கடத்ததயோ கூச்சத்தையோ ஏற்படுத்தாமல் அல்லாஹ்வுக்கு பயந்தவர்களாக செயல்பட்டு வருகிறார்கள் - அல்ஹம்துலில்லாஹ் !
இவ்வருடமும் உங்களின் பங்களிப்பை அல்லாஹ்வும் அவனது ரசூலும் காட்டித் தந்த வழியில் தேவையுடையவர்களின் இல்லங்களுக்கே தேடிச் சென்று வழங்கிட உதவிடுங்கள்.
எவ்வித இயக்க பெயர்களுடன் இவர்களின் செயல்கள் இல்லாமல் நன்மையை நாடியே தன்னார்வத்துடன் செயல்படும் AIM மூலமாக வழங்கிடுங்கள்.
தமிழ் தட்டச்சு
Post a Comment
11