அதிரை - 05 - ஜூன் - 2011 - செவ்வாய்க்கிழமை.
நமதூர் கீழத்தெருவைச்சேர்ந்த சேக்தாவூத் என்பவர் பட்டுக்கோட்டையில் இருந்து அதிரையை நோக்கி இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டு இருந்தார். அவரது இருசக்கர வாகனம் எதிரே வந்த வாகனத்தின் மீது மோதி பலத்த காயம் ஏற்பட்டு,மேல் சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .
வாசகர்களே, உயிரோடு விளையாடும் வாகன விபத்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது,கவலை தருகின்றது. கடந்த ஒரு வாரத்திற்குள்ளாக, அதிரை - பட்டுக்கோட்டை சாலையில் இரு வேறு விபத்துகள் நடந்திருப்பது வருத்தம் தருகின்றது.
இந்த விபத்திற்கான காரணம் விரைவில் தெரியவரும் என்றாலும், கவனமின்மை, அதிக வேகம், சாலை விதிகளை மதியாமை ஆகியன பெரும்பாலான விபத்துகளுக்கு பிரதான காரணங்களாக இருக்கின்றன. பத்தாம் வகுப்பு தாண்டியதும் பைக் வேண்டும் எனக் கேட்கும் சிறுவர்களும், என்ன கேட்டாலும் வாங்கி தரும் பெற்றோரும் பெருகி வருவதும், அப்படி வாங்கித் தந்த பின்னர் அவர்களின் மனம் போன போக்கிற்கு செல்ல அனுமதிப்பதும் நமதூரில் அதிகரித்து வருவது மறுக்க இயலாத உண்மை. உரிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படாவிடில், உயிரிழப்புக்கள் ஏற்படும் அபாயத்திற்குத் தள்ளப்படுவோம் என்பதை அதிரை BBC வருத்தத்துடன் பதிகின்றது.
எங்கோ படித்ததாக ஞாபகம்.
"உங்கள் குழந்தைகள் பெரியவர்கள் ஆகும் வரை அவர்களை வாகனம் ஓட்ட அனுமதிக்காதீர்கள். மீறி அனுமதித்தால் அவர்கள் பெரியவர்கள் ஆகாமலேயே போகக்கூடும்"

3 comments:
வேதனையளிக்கும் செய்தி !
அதிர்ச்சியான தகவல்..
பலத்த காயமடைந்த சகோதரர் சேக்தாவுத் பரிபூரண் குணமடை எல்லோரும் துஆ செய்வோம்.
வேகம் விவேகமில்லை என்பது வாகன ஓட்டிகளுக்கே முதலில் பொருந்தும்.
இளைய தலைமுறையினரின் போக்கு சற்று கவலையளிக்க கூடியதாகவே இருக்கின்றது. யா! அல்லாஹ் பாதுகாப்பாயாக! விபத்துக்குள்ளான சகோதரர் விரைவில் பூரண குணமடைய துஆ செய்வோம்.
தமிழ் தட்டச்சு
Post a Comment
11