Powered by Blogger.

Followers

Saturday, 2 July 2011

இழவு காத்த கிளியாக அதிரைப் பொதுமக்கள்

ஆலடி குளம் முகைதீன் ஜூம்மா பள்ளிக்கு சொந்தமாக இருக்கிறது. பேரூராட்சி நிர்வாகம் வருடத்திற்கு இரண்டுமுறைதான் (இரண்டு பெருநாட்களின் முதல்நாள் அல்லது அடுத்தநாள்) ஆலடி குளம் பகுதிகளில் சுத்தம் செய்ய வருவதால் குளத்தை சுற்றியுள்ள வீடுகள் மற்றும் தெருவில்லுள்ளோர் வேறுவழியின்றி குப்பைகளை இந்தக் குளத்தில் கொட்டுகின்றனர். எனினும் இது கண்டிக்கத்தக்கது.

குளம் அசுத்தமடைந்து வருவதால் ஒருசில ஆண்டுகளிலேயே நிலத்தடி நீர் நச்சுத்தன்மை அடைந்து துர்நாற்றம் அடைந்து உபயோகிக்காத சூழ்நிலை ஏற்படும் என்று சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்கள் கவலை அடைந்துள்ளனர். அதனால் பொதுமக்கள் குளத்தை சுத்தம் செய்துதரக் கோரி பேரூராட்சி அதிகாரிகளையும் வார்டு உறுப்பினரையும் பலமுறை கேட்டுகொண்டுள்ளனர்.



அவர்களின் கோரிக்கைகள் செவிடன் காதில் ஊதிய சங்காக இருப்பதால் உள்ளாட்சித் தேர்தல் வரும்வரை இழவு காத்த கிளியாக இருப்பதற்கு முடிவுசெய்துள்ளனர்.

புகைப்படம் உதவி: tidings

3 comments:

முஹம்மது அப்துல்லாஹ் said...

அஸ்ஸலாமு அலைக்கும். நடக்கயிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் நம்மிடம் வந்து எனக்கு வாக்களியுங்கள் என்று கேட்கும்போது அவர்கள் எப்படி பதவியில் இருக்கும்போது காதிருந்தும் செவிடன்போல் மக்களின் குறையையும் ஊர் நலனையும் கண்டுக்கொள்ளாமல் இருந்தார்களோ அதுப்போல் நாமும் கண்டுக்கொள்ளாமல் இருப்போம்...

ZAKIR HUSSAIN said...

ஒரு நல்ல விசயத்தையும் சுற்றப்புற சூழல் மாசுபடாமல் இருக்க உங்கள் பணி பாராட்டுக்குறியது. இருப்பினும் நீங்கள் வெளியிடும் படங்களில் ஒரு சின்ன இனிசியலாக இருக்க வேண்டிய உங்கள் வலைப்பூவின் பெயர் இப்படி அனியாயத்துக்கு பாகிஸ்தான் டெலிவிசன் பெயர் மாதிரி[அவனுகளோட கவரேஜ் இல் ஏதோ அரபு எழுத்தில் "ஜெ' பெரிய அளவில் காண்பித்து செய்திக்கு முக்கியத்துவம் இல்லாமல் போய் விடும்.] இவ்வளவு பெரிய அளவு இருக்க வேண்டுமா?

அபுஇபுறாஹீம் said...

//சின்ன இனிசியலாக இருக்க வேண்டிய உங்கள் வலைப்பூவின் பெயர் இப்படி அனியாயத்துக்கு பாகிஸ்தான் டெலிவிசன் பெயர் மாதிரி[அவனுகளோட கவரேஜ் இல் ஏதோ அரபு எழுத்தில் "ஜெ' பெரிய அளவில் காண்பித்து செய்திக்கு முக்கியத்துவம் இல்லாமல் போய் விடும்.] //

ஆமாம் அசத்தல் காக்கா அதச் சொல்லப் போனா... இவய்ங்க யாருன்னு சொல்லன்னு இருந்திடுவாங்களோன்னுதான் நானும் சொல்லவில்லை !

Post a Comment

11