Powered by Blogger.

Followers

Wednesday, 13 July 2011

இமாம் ஷாஃபி பள்ளியின் பரிசு வழங்கும் நிகழ்ச்சி ...

இமாம் ஷாஃபி பள்ளியில் பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி
நேற்று (13/07/2011) இமாம் ஷாஃபி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது . இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஓமன் நாட்டில் இருந்து சிறப்பு விருந்தினர் வருவதாக இருந்தது. சில தவிர்க்க இயலாத காரணத்தால் அவர் வரவில்லை .

விழாவின் சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் நிகழ்ச்சி அமைப்பாளர்கள் விபரம் பின் வருமாறு:

நிகழ்ச்சி தலைமை : அப்துல் காதிர் ஆலிம் சாஹிப் அவர்கள்

வரவேற்புரை : பேரா. S பர்கத் MA. M.phil அவர்கள்

வாழ்த்துரை : பேரா. M.A அப்துல் காதிர் MA. M.phil CJMC அவர்கள்

சிறப்புரை : சகோ. M.B அஹ்மது அவர்கள்

பரிசு வழங்கி சிறப்பித்தோர் : சகோ. MST தாஜ்தீன் அவர்கள்
மற்றும் A.M இக்பால் ஹாஜியார் அவர்கள்.

நிகழ்ச்சியின் புகைப்படமும் காணொளியும் அதிரை BBC வாசகர்களுக்காக இதோ :

6 comments:

Mohamed Fawaz said...

vetri petra maanavarkaluku vaazhthukkal...!!!

தாஜுதீன் said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

நம் இமாம் ஷாஃபி பள்ளி மாணவிகள் பரிசுகள் அதிக மதிப்பெண்கள் எடுத்து பரிசுகள் வாங்குவதை பார்க்கும் போது பெருமையாக உள்ளது.

இது போல் வரும் ஆண்டில் மாநில அளவில், குறைந்த பட்சம் மாவட்ட அளவில் நம்மூர் மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுத்து பெற்றோருக்கும் பள்ளிக்கும் பெருமை சேர்ப்பார்கள் என்று நம்புவோம். அல்லாஹ்விடன் து ஆ செய்வோம்.

மற்ற அதிரை பள்ளிகளிலும் இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தி மாணவ மாணவிகளை ஊக்கப்படுத்த வேண்டும்.

காணொளியை எல்லோர் பார்வைக்கும் தொகுத்தளித்த அதிரை பிபிசிக்கு மிக்க நன்றி.

அபுஇபுறாஹீம் said...

Good JOB - Adirai BBC !

Keep it up good work !

inthiaz said...

imthiaz. very good.keept up

tidings said...

அன்புள்ள அதிரை பி பி சி வாசகர்களே ...இது போல் நமதூர்ரின் பல்வேறு செய்திகளை கொடுக்க காத்துஇருக்கிறது நமது அதிரை பிபிசி தொடர்ந்து ஆதரவு அளியுங்கள்

கலாம் காதிர் said...

அதிரை அஹ்மத் அவர்களின் ஆங்கில உரையில் அடுக்கு மொழி அழகு என்னைக் கவர்ந்தது. எழுதி வைத்துப் படிக்கும் எத்தனையோ பேர்களை நாம் பார்த்திருக்கின்றோம். ஆனால், சகோதரர் - என் மரியாதைக்குரிய குருநாதர்-அதிரை அஹ்மத் காக்கா அவர்கள் ஆங்கித்தில் சரளமாகவும் இலக்கணப் பிழை இன்றியும் பேசியதிலிருந்து நம்மூரில் அறிஞர்கள் பலர் இருப்பது எமக்கு மகிழ்வைத் தருகின்றது. அவர்களை அதே இமாம் ஷாஃபி(ர்ஹ்) மெட்ரிக்குலேஷன் பள்ளியில் ஆங்கிலம் அல்லது தமிழ் ஆசிரியராக நியமிக்கலாம். அவர்களிடம் ஆங்கிலம், தமிழ் இரு மொழியிகளிலும் புலமை உண்டு. முதன் முதலாக இப்பள்ளியின் முத்லிடம் பிடித்த மாணவி எதிர்காலத்தில் பொறியாளராக வரவிருப்பது கேட்டு மிக்க மகிழ்ச்சி. இதே முறையில் பர்க்கத் சார் அவர்களின் தீவிர கண்காணிப்பில் இப்பள்ளி செயல் பட்டால் அடுத்த ஆண்டு இன் ஷா அல்லாஹ் மாநில அல்லது மாவட்ட அளவில் முதலிடம் பிடிக்க இயலும்


“கவியனபன்”, கலாம், அதிராம்பட்டினம்

Post a Comment

11