Powered by Blogger.

Followers

Wednesday, 14 September 2011

உள்ளாட்சி மன்ற தேர்தலில் தி.மு.க தனித்து போட்டி: கருணாநிதி அறிவிப்பு

சென்னை, செப்.14: உள்ளாட்சித் தேர்தலில் அரசியல் நோக்கில் கூட்டணி வைத்துக் கொள்ளாமல் திமுக தனித்துப் போட்டியிடும் என திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.2006 தேர்தல் வரை உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி அமைத்தே போட்டியிட்டது. இந்த முறையே முதல்முறையாக திமுக தனித்துப் போட்டியிட உள்ளது.இது தொடர்பாக புதன்கிழமை அவர் அறிக்கை வெளியிட்டார்."மத்தியில் முற்போக்கு அரசை அமைத்திடவும், மாநிலத்தில் ஜனநாயக ஆட்சியை அமைக்கவும் பயன்பட வேண்டும் என்ற காரணத்திற்காகவே ஒரேமாதிரியான கருத்துடைய கட்சிகளோடு திமுக கூட்டணி அமைத்தது. உள்ளாட்சித் தேர்தல்: உள்ளாட்சித் தேர்தல்களில் அரசியல் அடிப்படையோ, கொள்கை அடிப்படையோ முன் வைக்கப்படாமல் பொது மக்களுக்குத் தேவையான சுகாதாரம், கல்வி, சாலை, மருத்துவம், குடிநீர் போன்ற பொதுப்பணிகளைக் குறிக்கோளாக கொண்டு இயங்க வேண்டும். எனவே, உள்ளாட்சி மன்றத் தேர்தல்களில் அரசியல் நோக்கில் கூட்டணிகளை உருவாக்குவது தேவையில்லை என்பதை ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு திமுக முடிவாக எடுத்துள்ளது' என்று கூறியுள்ளார் கருணாநிதி.

நன்றி தினமணி

3 comments:

அபுஇபுறாஹீம் said...

மு.க.(கையில்) உள்ள ஆட்சி போனது தன் மக்களால் என்று உணர்ந்ததும், இப்போது உள்ளாட்சி(யில்) பொது மக்களை நினைக்கிறார் அவர்களின் பிரச்சினையை தீர்க்க(தரிசி யல்லவா) !

பழுத்த அரசியல் வாதியாச்சே !

மாநில அரசியல், தேசிய அரசியல் நடத்தும் இவரே இன்று மக்கள் பிரச்சினைதான் பிரதானம் என்றும் சொல்லும் அளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கிறார் !

அப்படின்னா நம்மா நெலமை ??

கலாம் காதிர் said...

மற்றோ ரெல்லாம் அணியில்
***** மஞ்சள் துண்டு தனியே
கற்றுக் கொண்ட பாடம்
******”கூடா நட்பு கேடாம்”
வெற்றி பெறும் காட்சி
******விரைந்த பேட்டி மாட்சி
சுற்றி யிருந்த கேடு
***** சுவடு தெரியா மலோடும்

அபுஇபுறாஹீம் said...

கலாம் காதிர் காக்க !

மரபும் பேசுகிறது
மஞ்சள் துண்டு
நிறமட்டுமே சேர்ப்பது என்றும் !

அருமை காக்கா... !

Post a Comment

11