Thursday, 8 September 2011
சம்சுல் இஸ்லாம் சங்க பொது கூட்டம்
இன்ஷா அல்லாஹ் நாளை(09-09-2011) நமதூர் சம்சுல் இஸ்லாம் சங்கத்துக்கு உட்பட்ட முஹல்லா வாசிகளுக்கு பொது கூட்டம் அஸர் தொழுகைக்குப் பிறகு சம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் நடைபெறுகிறது. அதன் முக்கிய நிகழ்வாக வரும் உள்ளாட்சி தேர்தலில் சிறந்த வார்டு உறுப்பினர் மற்றும் சிறந்த பேரூராட்சித் தலைவரைத் தேர்ந்தேடுப்பது தொடர்பாக மற்றும் தக்வா பள்ளி விவகாரம் பற்றிய ஆலோசனை கூட்டமும் நடைபெற இருக்கிறது. ஆதலால் சம்சுல் இஸ்லாம் சங்கத்துக்கு உட்பட்ட அணைத்து முஹல்லா வாசிகளும் மற்றும் தக்வா பள்ளி முஹல்லா வாசிகளும் வருகைத் தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
அரசியல் ஒரு சாக்கடை , அதில் சம்சுல் இஸ்லாம் நிச்சல் அடிக்க தன்னை தயார் படுத்தி கொள்ளுகிறது .... சரி விடுங்க .... அடி வாங்கினவர்கள் அல்லது அடி கொடுத்தவர்கள் மறுபடியும் இதை ஒரு சந்தர்பமாக பயன்படுத்தாமல் இருந்தால் சரி .... நோன்பு நேரத்தில் அல்லாஹு வுடைய பள்ளியில் அடங்காமல் அராஜஹம் செய்தவர்கள் சம்சுல் இஸ்லாம் கட்டிடத்தில் அடங்குவார்கள பொருத்து இருந்து பார்போம்
தக்வா பள்ளி விவகாரத்தையும் அரசியல்லையும் ஏன் ஓன்றாக இணைக்க வேண்டும்? தக்வா பள்ளி விவகாரம் பற்றிய ஆலோசனை கூட்டம் தனியாக அழைக்கலாமே?
கூட்டம் நன்மையாக அமையட்டும்.
நானா நீனா என்பது முக்கியமல்ல நாளை இதுபோன்று நடக்காமல் பார்த்துக்கொள்வது முக்கியம்.
நம்மை பாதுகாக்க நமக்கு காவல்துறைதேவையா? சிந்திப்பீர்.
சம்பந்தப்பட்டவர்கள் ஒதுங்கிவிட்டு நடுநிலையாளர்களிடம் நிர்வாகத்தை ஒருமனதாக ஒப்படைத்து விடுங்கள்.
அதுபோல அரசியலிலும் பதவி எண்ணங்களை விட்டுவிட்டு ஆலோசனையின் படி செயல்பட்டுபார்த்தால் நாளை அரசியல் கட்சியே நம்மிடம் கைகட்டி நிற்கும்.நமக்குள் போட்டிபோட்டு நாளை நாம் அசிங்கப்பட வேண்டாம்.
"விட்டுக் கொடுங்கள்.வெற்றிஅடைவீர்கள்"
நானா நீனா வேண்டாம் சகோதரர்களே!
தமிழ் தட்டச்சு
Post a Comment
11