Powered by Blogger.

Followers

Tuesday, 28 June 2011

பொறுப்பில்லா மக்கள்! பொறுப்பற்ற பேரூராட்சி!

நமதூர் கீழத்தெருவில், காதிர் முகைதின் கல்லூரி பின்புறமாக ஒரு குளம் அமைந்துள்ளது . இந்தக் குளத்தின் அருகாமையில் இருக்கும் வீடுகளில் இருந்து வரும் கழிவுநீர் இந்தக் குளத்தில் கலந்து விடுகின்றது. மேலும் கழிவுகளையும், குப்பைகளையும் இந்த குளத்தில் கொட்டிவிடுகின்றனர். இதனால் இக்குளம் பெரும் அளவில் மாசுபடுகின்றது.

குளத்தின் அருகே இருக்கும் தெருவில் நடமாட முடியாமல் அனைவரும் பெரிதும் சிரமப்படுகிறார்கள். குறிப்பாக, இதனால் பெரிதும் பாதிக்கப்படுவது கல்லூரி மாணவர்கள். இந்த குளத்தின் மற்றொரு கரையில் கல்லூரியின் வகுப்புகளில் சில இருப்பதால், சில நேரங்களில் அந்த வகுப்பறைகளில் தொடர்ந்து பத்து நாட்கள் கூட வகுப்பு நடைபெற முடியவில்லை.

அரிய பொக்கிஷமான ஒரு குளத்தை வீணடிக்கின்றோம் என்ற கவலையும்,அக்கறையும் நம் மக்களுக்கும் இருப்பதாக தெரியவில்லை. இந்த குளத்தை சுத்தப் படுத்தும் முறைகளைக் கையாண்டு, மறுபடி அக்குளம் மாசு படாமல் இருப்பதற்குரிய விழிப்புணர்வு செயல்களை நமதூர் பேரூராட்சி நிர்வாகமும் செய்வதாக தெரியவில்லை.

அந்தக் குளத்தின் தற்போதைய அவல நிலையை கீழ்க்காணும் புகைப்படங்களில் நீங்களே பாருங்கள்.




 



5 comments:

adiraidailynews said...

இது போல் அணைத்து தெருக்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க அதிரைbbcயிடம் கேட்டு கொள்கிறோம்

அபுஇபுறாஹீம் said...

இதனை பேரூராட்சியின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதா ? அப்படிச் செய்வதற்கு என்னன்ன வழிகள் ! அதனையும் வெளியிட்டால் நன்மை பயக்கும்.

குறிப்பாக சுட்டிக்காட்டுவதோடில்லாமல், கலைந்தொழிய வழிகளிருப்பினும் அதனையும் வைத்தால் ஒன்று கூடி குரல் எழுப்பவும் கருத்தை பதியவும் வாய்ப்புகள் அதிகம்.

இணையத்தின் வழியே தொடர்ந்து புகார் மனுக்களை உரியவர்களுக்கு அனுப்பிடவும் வழிவகை செய்யும்.

முஹம்மது அப்துல்லாஹ் said...

அதிரை பி பி சி-ற்கு ஓர் பணிவான வேண்டுகோள். தங்களுடைய பணியை எந்த பாகுபாடு இல்லாமல் நமது ஊரில் நடக்கும் அத்தனை விஷயத்திலும் அக்கறை எடுத்து செய்தியை வெளியிட வேண்டிக் கொள்கிறேன்.

Adirai Nesan said...

ஊர் மக்களின் நலனில் அக்கறை கொண்டு பதியப்பட்ட பதிவு. அநேகமாக பதிவர், வாய்க்கால் தெரு பள்ளிக்கூடத்தை கடந்துதான் புகைப்படத்தை எடுக்க சென்றிருக்கக்கூடும். செட்டிய்யர்குலத்தின் அவலத்தையும் எழுதவேண்டும். அதனைச்சுற்றி நம் மக்களின் வீடுகளும் நம் பிள்ளைகள் படிக்கக்கூடிய ஒரு பள்ளிக்கூடமும் இருக்கத்தான் செய்கிறது.
விரைவில் அதைப்பற்றி பதியக்கூடும் என நம்புகிறேன்.

Shafeek said...

We should take action for this kind of things....

Post a Comment

11