புனித ரமலான் மாதத்தில் துபாய் அரசின் அங்கமான அவ்காப் எனும் இஸ்லாமிய அமைப்பு வருடந்தோறும் ஒவ்வொரு மொழியைச் சேர்ந்த சிறந்த இஸ்லாமிய பேச்சாளர்களை அழைக்கிறது. அவர்களது சொற்பொழிவுகளை முஸ்லிம் மற்றும் மாற்று மதத்தவர்கள் கேட்க அழைத்து இப்தார் விருந்து வைத்து உபசரிப்பது வழக்கம்.
அவ்வகையில் தமிழகத்தில் மிகவும் அறியப்பட்ட மார்க்க பேச்சாளரும் தாருல் ஹூதா நிறுவனத்தின் உரிமையாளருமான முஃப்தி உமர் சரீப் அவர்கள் துபாய் அரசு விருந்தினராக வரவழைக்கப்பட்டிருக்கிறார். நேற்று அவர் அவ்காப் நடத்திய நிகழ்ச்சியில் சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார். இதில் சுமார் 1000 பேர் கலந்துகொண்டனர்.
இதனைத் தொடர்ந்து இன்ஷா அல்லாஹ் இன்றிரவு இந்திய நேரம் 11.30 மணியிலிருந்து 12.30 மணிவரை துபாயிலிருக்கும் அதிரை இஸ்லாமிக் மிஷன் அமைப்பு நடத்தும் ரமலான் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சியில் உரையாற்ற இருக்கிறார். இன்ஷா அல்லாஹ் இந்நிகழ்ச்சி அதிரை பிபிசியில் நேரலையாக ஒளிபரப்பப்படும்.
1 comments:
மிகவும் நல்ல பயனுள்ள சொற்பொழிவை இல்லை இல்லை வகுப்பெடுத்தார் !
"ரமளானுக்கு பிறகு" என்ற தலைப்பில் எப்படி நம் அமல்கள் இருக்கனும் என்று !
இவ்வாறான சிறப்பு நிகழ்ச்சிகளை நடாத்தும் அதிரை இஸ்லாமிக் மிஷன் (AIM) துபை பொறுப்புதாரிகளுக்கும் அதற்காக சிரத்தை எடுத்து இணைய வழி நேரலைக்கு உழைக்கும், ஒத்துழைக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக ! அவர்களின் நற்செயல்கள் அனைத்தையும் அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக !
தமிழ் தட்டச்சு
Post a Comment
11