Powered by Blogger.

Followers

Monday, 15 August 2011

அதிரை பிபிசியின் மைல்கல் - அதிரையின் முதன்மை தளமாக உருவெடுத்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!!

கடந்த ஜூன் 27, 2011 அன்று தொடங்கப்பெற்ற அதிரை பிபிசி வலைப்பதிவு, இறைவனின் உதவியாலும் வாசகர்களின் நல்லாதரவாலும் அதிரையின் முதன்மை வலைப்பதிவாக உருவாகியிருக்கிறது. அதிரை பிபிசியில் 500 க்கும் மேற்பட்ட வாசகர்கள் தினமும் வந்து செல்கின்றனர் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களாகிய உங்களிடம் பகிர்ந்து மகிழ்கிறோம். அல்ஹம்துலில்லாஹ்.

ஒன்றறை மாதத்திற்கு முன் ஊடக ஆர்வத்தில் தொடங்கப்பெற்ற இந்த இலவச வலைப்பதிவின் அபரித வளர்ச்சி எங்களுக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் தருவதோடன்றி அதிகமான சமூக பொறுப்பையும் எங்களுக்கு அளித்துள்ளது என்றால் அது மிகையில்லை.

உள்ளூர் பங்களிப்பாளர்களை மட்டுமே கொண்டு யாருடைய நெருக்கடிகளும் இல்லாத சுதந்திரமாக செயல்படும் களமாக அதிரை பிபிசி திகழ்ந்து வருகிறது. அதிரை பிபிசி தொடங்கப்பட்டது முதல் தொழில்நுட்ப அளவில் இதுவரை யாரும் செய்திராத சாதனைகளை வலைப்பதிவுகள் ஊடாக செய்துவருகிறோம். அல்ஹம்துலில்லாஹ்.

அதிரை செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நாங்கள் வெளியிடுவதை அதிரை மட்டுமல்லாத மற்ற பகுதி மக்களும் ஆர்வம் கொண்டுள்ளதை காண முடிகிறது.

தற்போது,

1. அதிரையில் நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் வழங்குவதற்காக சோதனை முயற்சியாக ரமலான் மாத சொற்பொழிவுகளை நேரலைகளாக வழங்கி வருகிறோம். இன்ஷா அல்லாஹ் வரும் காலங்களில் உள்ளூர் செய்திகளை நேரலைகளாக வழங்கவும், செய்தி வாசிக்க இளைஞர்களை குறிப்பாக மாணவர்களை பயிற்சி அளித்து தயார்படுத்தவும்  திட்டமிட்டுள்ளோம்.

2. அதிரை பிபிசி பங்களிப்பாளர்களாக உள்ளூரில் வசிப்பவர்களே உள்ளனர். சென்னை அல்லது அதிரையில் வசிப்பவர்கள் பங்களிப்பாளர்களாக விருப்பம் இருந்தால் மடலிடவும். குறிப்பாக இளைஞர்கள், மாணவர்கள் முன்வரும் பட்சத்தில் அவர்களுக்கு தேவையான நுட்ப உதவிகளையும், பயிற்சிகளையும் வழங்க தயாராக இருக்கிறோம். இன்ஷா அல்லாஹ்.
3. அதிரையில் மட்டுமல்லாத சமுதாயம் சார்ந்த மற்ற செய்திகளையும் நேரலைகளாக பதிந்து வருகிறோம். அதன் ஒருபகுதியாக கடந்த சனிக்கிழமை, சென்னை புதுக்கல்லூரி, மற்றும் கிரசென்ட் என்ஜினியரிங் கல்லூரி மாணவர்களின் ஏற்பாட்டில் மக்கா மஸ்ஜிதில் நடைபெற்ற ஒருநாள் இஸ்லாமிய மாநாட்டு நிகழ்வுகளை நேரலைகளாக ஒலிபரப்பினோம்.

4. நுட்ப விசயங்களில் முன்னணியில் இருப்பதால், கல்லூரி மாணவர்கள், இளைஞர்களை அதிகம் ஈர்க்கும் தளமாக அதிரை பிபிசி திகழ்ந்து வருகிறது. அல்ஹம்துலில்லாஹ்.

5. கல்வி விழிப்புணர்வை தூண்டுவதற்கான எங்களது முயற்சியின் பயனாக வெளியான அதிரையில் கல்வி - ஆவணப்படம் பகுதி -1 பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இம்முயற்சியை கல்வியாளர்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர். ஜஸாகல்லாஹ்...

6. சகோதரர் மீரானின் தேசப்பற்று வீடியோ பதிவு, உள்ளூரில் ஒளிந்து கிடக்கும் இளைஞர்களின் அறிவை உலகுக்கு அறியத்தர நாங்கள் எடுத்த சிறிய முயற்சிக்கு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

7. இமாம் ஷாஃபி பள்ளியில் நடைபெற்ற மாணவர்களுக்கான தன்னம்பிக்கை பயிற்சியை நேரலையாக ஒளிபரப்பினோம்.

8. அதிரையின் கலாச்சாரத்தை படம்பிடிக்கும் பொருட்டு வெளியிட்ட நோன்பு திறக்க வடை சமூசா ரெடி பதிவை வாசகர்கள் நன்றாக ரு(ர)சித்தார்கள்.

9. பேஸ்புக் கணக்கில் அதிரை பிபிசியை விரும்புபவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது.

10. எமது பங்களிப்பாளர்கள் பட்டறிவுடன், அனுபவ அறிவு, சமூக அக்கறை, அரசியல் பரிச்சயம், மார்க்கப்பற்று, ஊருக்கு ஏதாவது செய்யவேண்டும் என்கிற துடிப்பு கொண்டவர்களாக உள்ளனர்.

வரும் நாட்களில் அதிரையில் நடைபெறும் அரசியல், சமூகம் சார்ந்த நிகழ்வுகளை நேரலைகளாக ஒலி/ஒளிபரப்ப இருக்கிறோம். இன்ஷா அல்லாஹ்.

அதிரை பிபிசி பங்களிப்பாளர்கள் மீது வாசகர்களாகிய நீங்கள் கொண்டுள்ள நன்மதிப்பிற்கும், அன்பிற்கும் எங்களது நெஞ்சார நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். உங்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்றார்போல் அதிரை பிபிசி வெற்றிநடை போடும். இன்ஷா அல்லாஹ்.

உங்களது மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் எங்களது மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். நன்றி

வஸ்ஸலாம்.
அதிரை பிபிசி நிர்வாகிகள் மற்றும் பங்களிப்பாளர்கள்...

குறிப்பு:அதிரை பிபிசி வலைப்பதிவை http://adiraibbc.com மூலமாகவும் வந்தடையலாம்.

16 comments:

அபுஇபுறாஹீம் said...

மாஷா அல்லாஹ் !

அட !

கைதட்டவா ? ? முதுகில் தட்டவா ??

எது எப்படியிருந்தாலும் எனது கைவிரல்கள் தட்டிக் கொண்டேயிருக்கும் அதிரை பி.பி.சி.க்கு தட்டிக் கொடுக்க வேண்டியதை தொடர்ந்து !!!

நல்ல எழுச்சியின் வளர்ச்சி இது !

வாழ்த்துக்கள் ! தொடரட்டும் இப்பணி !

sheik maideen said...

அல்ஹம்துலில்லாஹ்
தொடரட்டும் நற்பனிகள் !
மாஷா அல்லாஹ் .. எனது பங்களிப்பும் நிச்சயம் இருக்கும் இன்ஷா அல்லாஹ் .

adiraibbc said...

அல்ஹம்துலில்லாஹ்!!! வெற்றி பயணம் தொடரட்டும்.

ZAKIR HUSSAIN said...

well done...Keep up the good work.

adiraidailynews said...

மாஷா அல்லாஹ்
அதிரைBBCயின் வெற்றி பயணம் தொடரட்டும்

tidings said...

மாஷா அல்லாஹ்
அதிரைBBCயில் எனது பங்களிப்பும் இருப்பது நான் பெருமையாக கருதுகிறேன்.மேலும் நமது ADIRAIBBC வெற்றி பயணம் தொடரட்டும்

HABEEBUR RAHMAN VAANA MEENA VARISAI said...

உங்களுடைய இந்த சிறந்த பணி தொடர அல்லாஹ் உதவி புரிவான்

HABEEBUR RAHMAN VAANA MEENA VARISAI said...

உங்களுடைய இந்த சிறந்த பணி தொடர அல்லாஹ் உதவி புரிவான்

அதிரைpost said...

அல்ஹம்துலில்லாஹ்!
உழைப்பிற் கேற்ற வளர்ச்சி,
தொடருங்கள் உங்கள் விரல் பிடித்து வருகிறேன்!

sabeer.abushahruk said...

Hard work never trails, but leads.
Keep it up.

தாஜுதீன் said...

well done...Keep up the good work.

ஊடகத்துறையில் காணொளி, நேரலை என்று மக்கள் ரசனைக்கு எற்ற வகையில் தங்கள் பாதையை அமைத்துக் கொண்டதே கடந்த இரண்டு மாதங்களில் அதிரைபிபிசி வளர்ச்சிக்கு ஒரு மிகப்பெரிய காரணம்.

வருங்காலத்தில் மற்ற சகவலைப்பதிவர்களுடன் ஒன்றிணைந்து அதிரைக்கு என்று ஒரு வலுவான ஊடகம் உருவாக வேண்டும் என்பது என்னைப்போன்றோரின் நீண்ட நாள் விருப்பம்.

நேரலை செய்வது அவ்வளவு சுலமமில்லை என்பதை AIM ரமழான் சிறப்பு சொற்பொழிவு நேரலை மூலம் கடந்த 17 நாட்களாக துபாயிலிருந்து அனுபவித்து, எதிர்நோக்கிவரும் உண்மை.

கடந்த இரண்டு மாதமாக எந்தவித சுய எதிர்ப்பார்ப்புமின்றி நிறைய நேரலை நிகழ்ச்சிகளை, அதுவும் சொந்த சர்வர் வைத்து அதிரைபிபிசி வழங்கிவருவது அவ்வளவு சுலபமான காரியமில்லை. இது முஸ்லீம் ஊடகத்துறையில் ஏற்பட்டுள்ள எழுச்சி என்று சொன்னால் மிகையில்லை. நிச்சயம் இதில் மாற்றுக்கருத்து யாருக்கு எழாது என்று நம்புகிறேன்.

இந்த வளர்ச்சி கடின உழைப்புக்கு கிடைத்துவரும் வெற்றி, எந்த காழ்ப்புணர்ச்சியுமின்றி, எல்லா சகோதர வலைப்பூக்களையும் அனுசரித்து மக்களுக்கு நன்மை செய்யும் நோக்கில், (சகோதரர்களே) உங்கள் ஊடக சேவை தொடர் வாழ்த்துகிறேன்.

அல்லாஹ் போதுமானவன்...

M.H. ஜஹபர் சாதிக் said...

மகத்தான பணியின் வெற்றிக்கு வாழ்த்துக்கள்.
மேலும் வளரட்டும் விண்ணை நோக்கி!

முஅ ஸாலிஹ் said...

ஆங்கிலத்தில் "you will not get second chance to give first impression" என்று சொல்வார்கள். அதுபோல் இரண்டாவது வாய்ப்பிற்காக காத்திராமல் முதல் தவனையிலேயே ஒருவகை வகை ஈர்ப்பை வடிவமைப்பிலும், தினமும் புதிய புதிய செய்திகளை தருவதிலும், மேல்மிச்சமாக காட்சி ஊடக பங்களிப்பின் மூலமும் AdiraiBBC வாசகர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது என்பது நிதர்சனமான உண்மை.

காட்சி வாயிலாக செய்திகள் பரிமாறப்படுவதே என்னை இத்தளத்திற்கு அடிக்கடி வந்து போக தூண்டியது. பதிவு மற்றும் Editing-ஐ எவ்வாறு கச்சிதமாக செய்கிறார்கள் என்ற ஆச்சரியம் எனக்கு ஏற்பட்டு அதை நாமும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஆரம்பம் முதலே இருந்து வருகிறது. ஆகவே இந்த நுட்பக் கல்வியை மாணவர்களுக்கு மட்டும் கற்றுக்கொடுப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் என் போன்றோருக்கும் கற்றுத் தந்து பயனடைச்செய்ய வேண்டும். செய்வீர்களா?

செய்திகளை புதிய window (open in new link) பார்க்க முடியவில்லை. இதை சரிசெய்தால் நலமாக இருக்கும்.

உங்களது இந்த முயற்சி முஸ்லிம்களுக்கான தனி மாற்று ஊடகமாக பரிணமிக்க வேண்டும் என்ற பிரார்த்தனையோடும், வாழ்த்துக்களோடும்...

'ஒருவனின்' அடிமை said...

மாஷா அல்லாஹ் பணி தொடரட்டும்.அல்லாஹ் மென் மேலும் வெற்றி தருவானாக.

Shameed said...

தலைப்பிறை அன்று தக்குவா பள்ளி அருகே நீங்கள் ஆர்வமாக வீடியோ எடுத்த விதம் உங்களின் வளர்ச்சி வளர் பிறையாய் தொடங்கியதை உணர்ந்தேன்

அஹமது இர்ஷாத் said...

வாழ்த்துக்க‌ள்..

Post a Comment

11