அஸ்ஸலாமு அழைக்கும் ...
அதிரையில் கல்வி தொடர்பான ஆய்வு ஒன்றை நடத்தி அதை வெளிநாடுகளில் வசிக்கும் நமதூர் சகோதரர்களுக்கு அறியத்தரவேண்டும் என்ற நீண்ட நாள் முயற்சிக்கு பின்னர் இந்த ஆவணப்படத்தை வெளியிடுகிறோம் . புகழ் அனனத்தும் இறைவனுக்கே குறைகள் இருந்தால் சுட்டிக்காட்டவும். உங்களுடைய ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன . முதல் பகுதியை கீழே காணலாம். மற்ற பகுதிகள் விரைவில் இன்ஷா அல்லாஹ்.
அதிரை மக்களுக்கு இந்த ஆவணப்படத்தை சமர்ப்பித்து மகிழ்கிறோம்.
17 comments:
WELL DONE ! Excellent work !
மாஷா அல்லாஹ் !
தொடரட்டும்... Director : Abu Umar (you have done it), Writing : Abu Zaid (கலக்கல்), Voice Mohammed (Supper)... Camera : Samsudeen (Weldone)
வாழ்த்துக்கள்...
அல்ஹம்துலில்லாஹ் !
அஸ்ஸலாமு அலைக்கும்,
மாஷா அல்லாஹ்,
உண்மையில் சமூக அக்கறையுடன் எடுக்கப்பட்ட மிக அற்புதமான ஆவணப்படம்.
இதற்காக மிகுந்த சிரமத்துடன் வேலை செய்துவரும் அனைத்து சகோதரர்களுக்கும் மிக்க நன்றி.
இது போன்ற காணொளிகள் நிச்சயம் நம் மாணவர்களின் பெற்றோர்களிடம் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்துமில்லை.
இந்த அற்புதமான கல்வி ஆய்வை தொடருங்கள்..
மாஷா அல்லாஹ். சமுதாயத்தின் முன்னேற்றத்தின் மீது அக்கறைக்கொண்டு எடுக்கப்பட்ட காணொளி. ரோசம்மா டீச்சர் அவர்கள் கூறும் பெற்றோர்களுக்கான கடமைகளில் கவனம் செலுத்தப் பட வேண்டும்.
சிரத்தையுடன் செயல்பட்ட சகோதரர்களுக்கு நன்றி. அடுத்தடுத்த பகுதிகளை ஆர்வத்துடன் எதிர்பார்த்திருக்கின்றோம்.
அன்புடன்,
ஷஃபாத்.
நல்லதொரு பகிர்வு.அதிரை தளங்களில் முன்னோடியாக திகழும் இது போன்ற ஆவணப் படங்கள்,இன்னும் நிறைய வேண்டும்.எங்கள் ஆசிரியை ரோசம்மா அவர்களின் பேட்டியும்,பேட்டி கண்ட முஹம்மதின் திறனும் பாராட்டுக்குரியவை.நன்றி
பிரமாதம்...!! மிக அருமையான ஆவணப்படம்..!! பெற்றோர்கள் கண்டிப்பாக பார்க்கவேண்டியது.
ஆக்கம் : அபூஉமர் என்பதைவிட இப்னுஉமர் என்பதை செயலில் சொல்லி இருக்கிறார்..
எழுத்து : குரான் வசனத்தையும் நபிகளாரின் பொன்மொழிகளையும் சொல்லி துவங்கியது அருமை தமிழா..!!
குரல் : பிபிசியில் ஒரு ஆவணப்படத்தை தமிழில் பார்த்த திருப்தி...அருமை..!!
கேமரா : இந்த முறை அவருடைய கேமரா பேசி இருக்கிறது...அவருக்கு இணையாகவே பேசி இருக்கிறது..சூப்பர்..!!
அருமையான ஆவணப்படம்,ஆசிரியை ரோசம்மா அவர்களின் அறிவுரைகள் அற்புதம்.நன்றி
மாசா அல்லாஹ், அருமையான,ஆக்கப்பூர்வமான தொகுப்பு இது,
தொடர்ந்து இன்சா அல்லாஹ் இதுபோன்று மேலும் , கல்வியின் வளர்ச்சி சம்பந்தமாக தொகுப்புக்களை மாணவர்களும்+பெற்றோர்களும் பயன்படும் வகையில் வழங்கவும்.
அதிரையின் கல்வி நிலை குறித்து ஆவன படமாக வெளிக்கொண்டு வந்தது பாராட்டக்குரியது!. வாழ்த்துக்கள்!. மேலும் முன்பை விட அதிரை மக்கள் கல்வியின் பக்கம் தங்களின் பார்வையை திருப்பி இருப்பதும் பாராட்டுக்குரியது.
இங்கே பதில் அளித்துள்ள தலைமை ஆசிரியர் அவர்கள் பெற்றோர்கள் கூட்டத்திற்கு வருவதில்லை என்று தங்களின் ஆதங்கத்தை தெரிவித்தார். அதற்கான காரணமாக மாணவர்கள் தங்களின் பெற்றோர்களிடம் அதை தெரிவிப்பதில்லை என்று கூறினார்கள். இதை ஒருபோதும் ஏற்றுகொள்ள முடியாது!. காரணம் இது நிர்வாக குறைபாடே!. பாலியின் நிர்வாகம் தான் நோட்டிஸ் மூலம் பெற்றோர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
குறிப்பாக டைரி சிஸ்டம் அமல் படுத்தப்பட வேண்டும். அதில் கூட்டத்தை பற்றி முறையாக தெரிவிக்க வேண்டும். அந்த டைரியில் பெற்றோர்களின் கையொப்பம் பெறப்பட வேண்டும்!. இதையெல்லாம் தாண்டி பெற்றோர்கள் கூட்டத்திற்கு வரவில்லை என்றால் அவர்களுக்கு தண்டனையாக ஒரு தொகையை வசூலிக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட கூட்டத்தினை தவற விட்டால் அவர்களுக்கு தண்டனையை அதிகரிக்க வேண்டும்.
நோன்பு சமயத்தில் இது போன்ற நல்ல பயனுள்ள விசயங்களை (ரமலான் புதிர்கள் } தந்தமைக்கு அதிரை bbcக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள் ..மேலும் இது போன்ற நல்ல பயன்னுள்ள செய்திகளை பதியுமாறு கேட்டுகொள்கிறேன்
அருமைப் பதிவு அறிவுத் தெளிவு
பெருமை அதிரை பிறப்பு
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்
முதலில் அதிரையின் கல்வித்திறனை உயர்த்தும் வகையில் பாடுபட்டுக்கொண்டிருக்கும் அனைத்து சகோதரர்களுக்கும் என் வாழ்த்துக்கள், தெளிவான பகிர்வு தெளிவான கருத்து, நிச்சயம் முழுமுதற்கொண்டு பெற்றோரே காரணம் தன் மக்களின் கல்விவளர்ச்சியில். முழு கவனம் செலுத்தினால் நலன்.
சகோ அதிரை முஜீப் கருத்தை அமோதிக்கிறேன், பெற்றோர்-ஆசிரியருக்கிடியே உரையாடுவதற்கு டைரி சிஸ்டம் கொண்டுவந்து அதன் மூலம் இருவருடைய கையொப்பமும் பெறப்படவேண்டும், தினமும் வீட்டுப்பாடம், பள்ளி நடவடிக்கை, மாணவன் திறன் அதில் அப்பப்போ தெரிவிக்க வேண்டும், மேலும் இமெயில் சிஸ்டம் (பெற்றோர்-ஆசிரியர்) ஏற்படுத்தி உடனுக்குடன் பதில் அனுப்பவேண்டும்.
http://deviyar-illam.blogspot.com/2011/08/blog-post.html
எந்திரன் உருவாக்கும் கல்வி...
பகிர்வுக்காக மட்டும்...
அஸ்ஸலாமு அழைக்கும்
முதலில் கருத்திட்ட அனைத்து சகோதரர்களுக்கும் நன்றி . கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு முன் அதிரையை பற்றி M.S.T தாஜுதீன் காக்கா அவர்களால் படிப்புதான் பாஸ்போர்ட் என்ற ஆவணப்படம் தயாரித்து வெளியிடப்பட்டது அதற்கு பிறகு எந்த ஒரு ஆவணப்படமும் வெளிவந்ததாக தெரியவில்லை. ஊரில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் எனக்கு நல்ல தொடர்பு இருந்ததால்
அவர்களிடத்தில் கல்வி பற்றி ஒரு சிறு பேட்டி எடுத்து போடவேண்டும் என்ற நோக்கத்தில்தான் அதிரை பிபிசி பங்களிப்பாளர்களிடம் கூறினேன் . அனால் பேட்டி எடுத்து முடித்தவுடன் அதை ஆவணப்படமாக மாற்றினால் நன்றாக இருக்கும் என்று அபுஉமர் மற்றும் அபுஜைத் ஆகியோர் ஆலோசனை வழங்கி அவர்களின் கடின முயற்சியால் கிட்டத்தட்ட 15 நாட்கள் சிரமப்பட்டு முதல் பகுதி வெளியிடப்பட்டது . இறைவனுக்கே எல்லா புகழும் . நமதூர் மக்களிடம் கல்வி பற்றி எடுக்கப்பட்ட இந்த ஆவணப்படத்திற்கு மாஷா அல்லாஹ் நல்ல வரவேற்பு .இன்ஷா அல்லாஹ் அடுத்த பகுதியை விரைவில் வெளியிடுகிறோம் .
//இன்ஷா அல்லாஹ் அடுத்த பகுதியை விரைவில் வெளியிடுகிறோம் .//
தம்பி முஹம்மத், நல்ல திறமையானவர்கள் (இயக்குவதிலும் / சிக்கலை சின்னா பின்னாமாக்குவதிலும் - trouble shoot) சுற்றியிருப்பதால் நிச்சயம் அடுத்தடுத்த பகுதிகள் இன்னும் மேல் தரம் பெற்று வெளிவரும் என்று ஆவலாய் இருக்கிறோம் இன்ஷா அல்லாஹ் !
சகோ முஹம்மதுக்கு நன்றி.ஆர்வமுடன் காத்திருக்கிறோம்.
தலைமையாசிரியை அவர்களின் கருத்துக்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை. இது போன்ற கல்வி தொடர்பான மேலும் பல பயனுள்ள தகவல்களை அதிரைபிபிசி-யிடம் இருந்து எதிர்பார்க்கிறோம்.
தமிழ் தட்டச்சு
Post a Comment
11